இங்கிலாந்தில் 14 வயது மாணவர் ஒருவர் 45 முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரையன் பேக்கர் என்ற அந்த மாணவர், இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் கவுண்டியில் உள்ள கார்ல்டன் சமுதாய கல்லூரியில் பயின்று வந்தார். இவர் தனது இருக்கையை சுழற்றி விளையாடியது, வகுப்பறையில் தூங்கியது, ஆசிரியரை நீங்கள் வாயை மூடுங்கள், என்று சொன்னது போன்ற பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டுள்ளதையடுத்து, கடந்த 9 மாதங்களில் மட்டும் 45 முறை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது தந்தை மார்க் பேக்கர், நான் எனது மகன் அப்பாவி என்று சொல்லவில்லை, அவன் முன்னர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உண்மை தான். அவன் செய்த தவறுகளுக்காக நானும் வீட்டில் தண்டனை கொடுத்துதான் வருகிறேன். எனினும் இந்த சம்பவத்தில் எனது மகன் மீது நியாயமற்ற முறையில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது. அதுவும் அவனை பள்ளியிலிருந்து வெளியேற்றது மிகவும் மோசமானது. என்று தெரிவித்துள்ளார்.
0 Comment "9 மாதங்களில் 45 முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 வயது மாணவர் "
Post a Comment