வாலு படம் வரும் என்று சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இப்படம் சொன்ன தேதியில் வராது என்பது மட்டும் உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில், சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடையும் விதமாக புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
‘வாலு’ படம் வருகிறதோ, இல்லையோ, இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக ‘அச்சம் என்பது மடமையடா’ வந்துவிடும் என்பது உறுதி.
0 Comment "சிம்பு நடித்து வந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. "
Post a Comment