கோடியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம், கடந்த வாரம் வெளியாகி முதல் வாரத்தில் உலகம் முழுக்க சுமார் 50 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்கிறார்கள். 6000 தியேட்டர்களுக்கு மேல் கோச்சடையான் படம் வெளியானதாகவும் சொல்லப்பட்டது. சென்னையில் உள்ள பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அத்தனை ஸ்கிரீன்களிலும் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. சென்னை முழுக்க தினசரி 300 காட்சிகளுக்கும் மேல் நடைபெற்றது. மூன்றே நாட்களில் நிலைமை மாறிவிட்டது.
கோச்சடையான் வெளியாகி ஒரு வாரமே ஆனநிலையில் தற்போது பல மல்ட்டிபிளக்ஸ்களில் ஒன்று அல்லது இரண்டு ஸ்கிரீன்களில் மட்டுமே கோச்சடையான் படம் திரையிடப்பட்டு வருகிறது. அதுவும் ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே..! இதனால் கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது என்கிறார்கள்.
0 Comment "தோல்வியைத் தழுவியதா கோச்சடையான்?"
Post a Comment