ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. பாக்கி 70 கோடியை இனி வரும் நாட்களில்தான் வசூல் செய்ய வேண்டும். இதற்கிடையே கோச்சடையான்-2-வை இயக்க ரகசிய திட்டம் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
கோச்சடையானின் இரண்டு மகன்களான ராணாவும், சேனாவும் சந்தித்துக்கொள்வது போல் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தார். அதுமட்டுமல்ல, பார்ட் 2 எடுப்பதற்கான அறிவிப்பையும் வைத்திருந்தார். அதன்படி கோச்சடையான் - 2 படத்தை எடுக்க தீர்மானித்துவிட்டாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த். ரஜினி நடிக்காமலே இந்தப் படத்தில் ரஜினி நடித்ததுபோல் படத்தை எடுக்க இருக்கிறார். அதாவது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துக்காக ஏற்கனவே ரஜினி உட்பட அத்தனை நட்சத்திரங்களையும் ஸ்கேன் பண்ணிவிட்டனர். எனவே இனி அவர்கள் யாரும் தேவையில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஸ்கேன் உதவியுடன் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் 2 படத்தை உருவாக்க இருக்கிறாராம்.
0 Comment "ரஜினி நடிக்காமலே கோச்சடையான்-2!"
Post a Comment