அஜய் தேவ்கன் தன் மனைவி கஜோலுக்கு முன்பாகவே... ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு முத்தம் !!

     
  அஜய் தேவ்கன் தன் மனைவி கஜோலுக்கு முன்பாகவே... ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு முத்தம் கொடுக்கிறார். பக்கத்தில் நின்று கொண்டு மிக்சர் சாப்பிடும் தோரணையில் கஜோலைப் பார்த்து, 'நான் இதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டேன்பா. இதெல்லாம் எங்க லைஃப்ல சகஜம்’ என்பது போலவே இருக்கிறது அல்லவா? ஆனால், கன்னத்தோடு கன்னம் வைத்துக்கூட சம்பந்தப்பட்ட இருவரும் உரசிக்கொள்ளவில்லை என்பதே நிஜம். எல்லாம் மாயா... 'ஆப்டிகல் இல்யூஷன்’ எனப்படும் கேமரா கோணத்தால் விழைந்த பிரச்னை. இந்தப் படம் வைரலில் இடம்பிடித்து பச்சன் குடும்பத்தின் மானத்தைக் கொஞ்சம் சந்தி சிரிக்கவைத்தது தனிக் கதை.

       பிரியங்கா சோப்ராவின் காதில் கிசுகிசுத்த காட்சி கிஸ் அடித்த எஃபெக்ட் கொடுத்ததில் ஆரம்பித்து 'வக்கிரம் ப்ரோ’ என சக நடிகைகளின் அங்கங்களை வெறித்துப் பார்க்கும் நாஸ்ட்டி எஃபெக்ட்டும் சேர்த்துக் கொடுக்கும் படங்கள், சரக்கடித்த எஃபெக்ட் கொடுக்கும் போஸ்கள் என லிஸ்ட் ரொம்பவே பெருசு. மில்லி மைக்ரான் செகண்டில் நடக்கும் இந்த ஷட்டர் பக் ஷாட்களில் சிக்கினால்தான் ஒருவரை உலகம் பிரபலம் என்கிறது. இந்த ஷாட்களை வெளியிட்டுள்ளது டெய்லி பாஸ்கர் என்ற இணையதளம். பிரபலம் என்றாலே பிராப்ளம்தானா?

0 Comment "அஜய் தேவ்கன் தன் மனைவி கஜோலுக்கு முன்பாகவே... ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு முத்தம் !!"

Post a Comment