செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் இயக்கி கொண்டிருக்கும் போது, மாட்டே முங்காரு என்ற கன்னட படம் ஒன்றிற்கு அனிமேஷன் செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மாட்டே முங்காரு படத்தின் முக்கிய அம்சமே அதில் இடம்பெறும் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்தானாம். ஆனால், சௌந்தர்யா இதுவரை அனிமேஷன் வேலைகளை முடித்துக் கொடுக்கவில்லையாம்.
இந்த படத்தின் இயக்குனர் ராகவா துவார்கி இது குறித்து கூறியதாவது,
படத்தின் அனிமேஷன் வேலைகளை செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்களிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கொடுத்திருந்தேன்., மூன்று மாதங்களில் பணிகளை முடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்த செளந்தர்யா, இதுவரை பாதி வேலைகளை கூட முடிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் மாட்டே மௌங்காரு படத்தின் ரிலீஸ் தேதியை பலமுறை ஒத்திவைத்து விட்டேன்.
எனவே, சௌந்தர்யாவால் எனக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த விசயத்தை வெளியில் சொல்லவில்லை. தற்பொழுது வெளிப்படையாகவே சொல்கிறேன், ‘செளந்தர்யா போன்று மந்தமான, மட்டமான ஒரு கலைஞரை நான் பார்த்ததே இல்லை’. அவரால் எனக்கு பலகோடி நஷ்டமாகிவிட்டது. அவரிடம் அனிமேஷன் பணியை கொடுத்தது தான் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளர்.
0 Comment "செளந்தர்யா ரஜினிகாந்த் போன்று மட்டமான பெண்ணை பார்த்ததே இல்லை..!"
Post a Comment