சென்சாரால் தடை செய்யப்பட்ட சன்னிலியோன் வீடியோ யூ டியூபில் கசிந்தது எப்படி?

கனடா நாட்டின் ஆபாச நடிகையும், பிரபல பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், நடித்து சமீபத்தில் வெளிவந்த ராகினி எம்.எம்.எஸ் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. படுகவர்ச்சியாக சன்னிலியோன் நடித்திருந்த இந்த படத்திற்கு சென்சார் போர்டு “ஏ” சர்டிபிகேட் கொடுத்திருந்தது. அப்படியிருந்தும் ஒருசில காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும்படி அறிவுறுத்தியது.
 
சன்னிலியோனின் ஆபாச காட்சி ஒன்று சமீபத்தில் யூடியூப் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. சென்சார் போர்டு அனுமதிக்காத காட்சிகளை யூடியூப் இணையதளத்தில் கசியவிட்டது யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை செய்ய சென்சார் போர்டு மும்பை போலீஸாரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ராகினி எம்.எம்.எஸ் படம் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மும்பையின் ஒருசில தியேட்டர்களில் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கும்நிலையில் இந்த படத்தை குறித்து பரபரப்பை ஏற்படுட்த்த தயாரிப்பு நிறுவனமே யூடியூபில் இந்த வீடியோவை லீக் செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்த வதந்தியை கடுமையாக மறுத்துள்ளார்
 
 
 
 

0 Comment "சென்சாரால் தடை செய்யப்பட்ட சன்னிலியோன் வீடியோ யூ டியூபில் கசிந்தது எப்படி? "

Post a Comment